சித்த மார்க்கம்
Tuesday, 5 May 2015
Tuesday, 18 September 2012
தேகத்தில் பஞ்சபூதங்களின் அம்சங்கள்
பிருத்திவி, அப்பு. தேயு, வாயு, ஆகாயம் என்பது பஞ்சபூதங்களாகும்.
தேகத்தில் பிருத்திவியின் அம்சமாவது: மயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை இவைகளாகும்
அப்புவின் அம்சமாவது: ஜலம், உதிரம், வெண்மை பாகங்கள், மூளை, மஜ்ஜை
தேயுவின் அம்சம்: நெருப்பு. நிறம் சிவப்பு. இதன் தன்மை பயம், அகங்காரம், சோம்பல், போகம், தூக்கம்.
வாயுவின் அம்சம்= காற்று. நிறம் பச்சை ஸ்படிகம். இதன் தன்மை ஓடுதல், இருத்தல், நடத்தல், நின்றல், கிடத்தல்.
ஆகாயம்= பரவெளி. ஸ்படிக நிறம். தன்மை காமம், க்ரோதம், மோகம், லோபம், மதம் இவைகளாகும்
Monday, 17 September 2012
பதினெண் சித்தர்கள் வணக்கம்
"நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணார்
நந்தியிடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார் கொங்கணவர் அகப்பேயர் பாம்பாட்டி
தேரையரும் குதம்பையரும் சட்டை நாதர்
செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தையுன்னி சிரத்தணியாய் சேர்த்தி வாழ்வா"